புகைவண்டிப் பெட்டிகளை
எரித்தது போதும்
மனிதர்களை வெறிகொண்டு
வெட்டியது போதும்
மதப்பெயரால் பிரிவினை
முளைத்தது போதும்
சாதி இரண்டென்று
ஒளவையார் உரைத்த
வார்த்தைகள் போதும்
இனி ...
சாதி ஒன்றுதான்
மதம் ஒன்றுதான்
அது
'மனித சாதி' யா
இல்லை ...
மனித சாதியிலும்
சாதி சேர்த்தது போதும்
'மனிதம்' என்பதே
போதுமடா
No comments:
Post a Comment