Sunday, September 23, 2012

நான் சார்ந்த சமூகம்
நான் அவர்களுக்குள் இருக்கும்போது
அவர்களைப் போலவே இருக்கச் சொல்கிறது
என் அலுவலகம் என்னை
அவர்களைப் போலவே இருக்கச் சொல்கிறது
நான் போகிற இடங்கள் ,வருகிற இடங்கள்
பழகுகிற இடங்கள்
எல்லாமே என்னை
அவர்களைப் போலவே இருக்கச் சொல்கிறது
நான் எப்போது நானாக இருப்பது மற்றும்
எத்தனை வகையாகத்தான்
நான் என்னை மாற்றிக் கொள்வது 
மனிதர்கள் உருவாக்குகிற
இயந்திரங்களே  மனிதர்களைக்
கொல்கின்றன  - விபத்து.