பாரதி நீ இறந்துவிட்டாய்
ஆயினும் இரவல் கொடுத்தாய்
உனது அடிமையாயிருந்த
கவிதைக் கலையை
மரபு உன்முன் மண்டியிட்டுநிற்க
நீ மாற்றுவழியில்
வேறொரு நாடடைந்தாய்
புதுக்கவிதைக்குத்
தலைமகனென்னும் பேரடைந்தாய்
இருந்தாலும் உனக்கு
இவ்வளவு உரமாகாது
உரமில்லா பாரதிக்கு
எழுதுகோல் சாரதியாகாது
உன்னை முழுவதுமாய்ப்
படிக்கவில்லை எவரும்
மூன்றுபா கூட மனனம்
செய்யவில்லை நானும்
காலன் உன்னைக் கைதியாக்க
கரியாகி வந்தான்
"மதமே"றி உன்னைக்
கொண்டு போனான்
சரிவிடு
உன்னை இளைஞனாக்கிப்போனான்
உன்னைத் தனக்குள்கொண்டு
கொஞ்சம் இறையாகிப்போனான்
ஆயினும் இரவல் கொடுத்தாய்
உனது அடிமையாயிருந்த
கவிதைக் கலையை
மரபு உன்முன் மண்டியிட்டுநிற்க
நீ மாற்றுவழியில்
வேறொரு நாடடைந்தாய்
புதுக்கவிதைக்குத்
தலைமகனென்னும் பேரடைந்தாய்
இருந்தாலும் உனக்கு
இவ்வளவு உரமாகாது
உரமில்லா பாரதிக்கு
எழுதுகோல் சாரதியாகாது
உன்னை முழுவதுமாய்ப்
படிக்கவில்லை எவரும்
மூன்றுபா கூட மனனம்
செய்யவில்லை நானும்
காலன் உன்னைக் கைதியாக்க
கரியாகி வந்தான்
"மதமே"றி உன்னைக்
கொண்டு போனான்
சரிவிடு
உன்னை இளைஞனாக்கிப்போனான்
உன்னைத் தனக்குள்கொண்டு
கொஞ்சம் இறையாகிப்போனான்
1 comment:
பாரதி கண்ட புதுமை பெண்...!
Post a Comment