தமிழில் பேசுபவனை,எழுதுபவனை,படிப்பவனைக் குற்றவாளியைப் போலப் பார்ப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான்.வேறெந்த மாநிலத்திலும் தன தாய்மொழியை இவ்வளவு புறக்கணிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.தமிழ் தெரியாது என்று சொல்வது பணக்காரத்தனம் என்று யார் இவர்களுக்குச் சொன்னார்கள்? இது ஒரு இரண்டாயிரம் வருடப் பழமையான நம் சிறப்பு மொழி அழிந்துவிடுவதை ஆதரிக்கும் பெருந்துயரம் இல்லையா? அதற்கும்மேல் தமிழ்மொழியும்,தமிழ்நாடும் நம் அடையாளம் இல்லையா? நம் அடையாளத்தைத் தொலைத்துவிட்டு எப்படி வாழப்போகிறோம் இந்த உலகில்?எங்கே வாழ்ந்தாலும் நம் அடையாளம் தமிழ்தானே?
No comments:
Post a Comment