என் சிறுவயதில் என் வீட்டில் ஒரு வானொலிப்பெட்டி இருந்தது.காலை எழுந்தது முதல் இரவு உறங்கப் போகும் வரை அது பாட்டுக்கு ஒரு ஓரமாய் இன்னொரு உயிராய் எங்கள் வீட்டில் பேசியபடியோ அல்லது பாடியபடியோ இருக்கும்.
எல்லா ஞாயிற்றுக்கிழமைகளிலும் வானொலிமுன் தொலைக்காட்சி பார்ப்பதுபோல் உட்கார்ந்து கொள்வேன்.எழவே மாட்டேன்.எங்கும் செல்லவும் மாட்டேன்.அப்படியே காலை எட்டரை மணி நாடகத்திலிருந்து வீட்டிற்குள் வருகின்ற மூன்று அலைவரிசைகளையும் tune செய்து செய்து வார இறுதி முடிந்து போகும்.சூலூர் கணேசன் வரும் நாடகங்கள்,அப்துல் ஹமீது தொகுத்து வழங்கிய பாட்டுக்குப் பாட்டு ,ஒலிச்சித்திரம் எதனையும் விட்டதில்லை.ஒரு வாரம் மிஸ் பண்ணிவிட்டாலும் வருத்தப்பட்டு,வருத்தப்பட்டு அடுத்த வாரம் வந்துவிடும்.அந்த வானொலிப்பெட்டியில் தான் அம்மா கர்ப்பமாக இருந்தபோது,அதாவது நான் அம்மா வயிற்ருக்குள் இருந்தபோது எப்போதும் பாடல்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்களாம்.அம்மா இப்போதும் சொல்வதுண்டு.பின்பு தொலைக்காட்சி வந்த பிறகு விட்டுப் போயிருந்த பழக்கம் FM வந்தவுடன் திரும்பவும் ஆரம்பித்தது.காலை ஆறு மணிக்கு ஆரம்பித்து கல்லூரி செல்லும் நொடிவரை ,மாலை வீடு திரும்பியதிலிருந்து தூங்கச் செல்லும்வரை பேச்சு,மூச்சு எல்லாம் FM தான்.FM ...FM ..FM ..மட்டுமே.ஞாயிறுகளிலும்,தேர்வு விடுமுறைகளிலும் என்னை வீட்டைவிட்டு வெளியே எங்கும் செல்லாது கட்டிப்போட்டது இந்த FM கேட்கும் பழக்கம்தான்.கேபிள்,கம்ப்யூட்டர் வந்த பிறகு வீட்டில் அறவே விட்டுப்போனது இந்தப் பழக்கம்.என் உயிரில்,உணர்வுகளில் இருந்த இந்தப் பழக்கம் பேருந்துகளில் பயணிக்கும்போது தொடர்கிறது.இரண்டு மணிநேரம் எல்லா அலைவரிசைகளையும் மாற்றி மாற்றிக் கேட்டுவிடுவதுண்டு.இப்போது எல்லா வாரங்களிலும் நான் புதிதாக வாங்கிய மொபைலில் என் வீடு முழுக்க FM மணக்கிறது.இது ஏனோ இவ்வளவு நாட்களாய் வைத்திருந்த மொபைல்களில் கிடைக்கவேயில்லை.அலைவரிசைகள் என் வீட்டிற்குள் வருவதால் அம்மாவிற்கு மீண்டும் பழைய ஆசை பூத்திருக்கிறது.ஒரு FM வாங்க வேண்டுமாம் உடனடியாக.வாங்கித்தருகிறேன் என்று சொல்லி இரண்டு மாதமாயிற்று.எப்படியாவது வெகு விரைவில் குறைந்தபட்சம் இன்னும் இரண்டு வாரத்திலாவது புதிதொன்று வாங்கிக் கொடுத்துவிட வேண்டும்.எத்தனை சேனல்கள் தொலைக்கட்சியில் வந்தாலும் அம்மாவுக்கு அந்த வானொலி தந்த மகிழ்ச்சி எதுவும் தராதென்று எனக்குத் தெரியும்.

No comments:
Post a Comment